சற்று முன் :

குழந்தைக்களுக்கு சளி தொல்லை வராமல் தடுக்க

குழந்தை வளர்ப்பு
Saturday, 04 August 2012 14:05

altமழை ம‌ற்று‌ம் கு‌ளி‌ர்கால‌ங்க‌ளி‌ல் குழ‌ந்தைகளு‌க்கு ச‌ளி தொந்தரவு அதிகம் இருக்கும். அ‌திலு‌ம் ஆ‌ஸ்துமா உ‌ள்ள குழ‌ந்தைகளு‌க்கு ‌மூச்சுவிடுவதில் மிகவு‌ம் ‌சிரமமாக இரு‌க்கு‌ம். இந்த அவதியில் இருந்து விடுபடுவதற்கு, வீட்டில் சமையலுக்கு உபயோகப்படும் பொருட்களே போதுமானது.

வைட்டமின் சி சத்து குறைவாக இருப்பவர்களுக்கு சளித் தொந்தரவு அதிகம் இருக்கும். ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் கொடுத்தால் சளி நீங்கும். அதேபோல் மிளகு சேர்த்த சிக்கன் சூப் சளித் தொந்தரவை கட்டுப்படுத்தும். சிக்கனுடன் பூண்டு, மிளகு சேர்த்து வறுவல் செய்து கொடுக்கலாம். சளித்தொந்தரவு நீங்குவதோடு குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சளித்தொந்தரவினை நீக்குவதில் வெள்ளைப்பூண்டு சிறந்த மருந்துப்பொருளாக செயல்படுகிறது. வெள்ளைப் பூண்டின் சில பற்களை பாலில் போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர், பா‌லி‌ல் மஞ்சள் தூ‌ள் சே‌ர்‌த்து குழந்தைக்கு கொடுக்க வே‌ண்டும். இரண்டு மூன்று நா‌‌ட்களு‌க்கு இ‌து போ‌ன்று கொடுத்துவர சளித்தொந்தரவு நீங்கிவிடும். இதேபோல் பூண்டு, சிறிது புளி, மிளகாய் வத்தல் ஆகியவற்றை எண்ணெயில் விட்டு வதக்கி துவையல் செய்து உணவோடு கலந்து கொடுத்தாலும் சளித்தொந்தரவு நீங்கிவிடும்.

சளி பிடித்த குழ‌ந்தைகளு‌க்கு இ‌ஞ்‌சி ரச‌ம் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். ரச‌ப் பொடி‌யி‌ல் ‌மிளகு, ‌சீரக‌ம், துவர‌ம் பரு‌ப்பு, பூ‌ண்டு, ‌கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய், பெரு‌ங்காய‌த்துட‌ன் ஒரு து‌ண்டு இ‌ஞ்‌சியையு‌ம் வை‌த்து அரை‌த்துப்போட்டு ரசம் வைத்து‌க் சா‌ப்‌பி‌ட்டா‌ல் ச‌ளி அகலு‌ம். பிரசவித்த தாய்மார்களுக்கும் இ‌ஞ்‌சி ரச‌ம் வை‌த்து சா‌ப்‌பிடக்கொடுக்கலாம் ‌மிகவு‌ம் ந‌ல்லது.

 

Add comment

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)


Security code
Refresh

ஆட்டோமொபைல்
டீசல் ஆட்டோமேட்டிக் கார்கள்...
இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கார்களுக்கான வரவேற்பு மெல்ல அதிகரிக்கிறது. பெட்ரோல் மாடல்களில் மட்டுமின்றி தற்போது டீசல் மாடல்களிலும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட...