சற்று முன் :

நெல்லை விட சாமை அரிசி விலை அதிகம்

தர்மபுரி
Friday, 18 November 2011 11:05

பென்னாகரம் : தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஏரியூர், பாப்பாரப்பட்டி, பெரும்பாலை, சின்னம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஐந்தாயிரம் ஏக்கரில் விவசாயிகள் சாமை பயிரிட்டுள்ளனர்.
பணப்பயிரான சாமை விதைத்தாலே போதும்.மருந்து ,உரம், தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை. 3மாதத்தில் அறுவடைக்கு வந்துவிடும். இதன்படி அறுவடை செய்யப்பட்டுள்ள சாமை ஒரு கிலோ ஞி21க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், உயர்ரகமாக கருதப்படும் பொன்னி நெல்லோ ஒரு கிலோ 7ரூபாய்க்கு வாங்கப்படுகிறது.
மழை இல்லாமல் பனியிலேயே விளையும் உணவு தானியமான சாமை இந்தியாவிலேயே, தமிழகம், மகாராஷ்டிரம், மற்றும் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தமிழக எல்லை பகுதிகளில் மட்டுமே விளைகிறது.  தற்போது நெல் அதிக அளவில் பயிரிடப்படுவதால் சாமை பயிர் செய்வது விவசாயிகளிடையே முற்றிலும் குறைந்து போனது. சில விவசாயிகள் மட்டுமே சாமை பயிரிடுகின்றனர்.
சாமை அறுவடைக்கு பின் அதனை அதிகம் பயன்படுத்தும் மாநிலமான மகாராஷ்டிரா மொத்த வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அனுப்புகின்றனர். இதற்காக வடமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருவதும் உண்டு. கடந்த 10 வருடங்களுக்கு  சாமை அறுவடையின் போது நாள் ஒன்றுக்கு 500 மூட்டை வீதம் 20க்கும் மேற்பட்ட வியாபாரிகளால் 20 நாட்களில் 10 ஆயிரம் மூட்டை சாமை அரிசி வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வந்தது. அதன்பின் பருவநிலை மாற்றம் மற்றும் ஆள் பற்றாக்குறையால் சாமை விளைவிப்பது படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது நாள் ஒன்றுக்கு 100 மூட்டை வீதம் 20 நாளில் 2000 மூட்டை மட்டுமே கிடைக்கிறது. இந்த நிலையில் உயர்ரகமாக கருதப்படும் பொன்னி நெல்லோ ஒரு கிலோ 7ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. ஆனால் சாமை ஒரு கிலோ ஞி21க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் விலையை விட மும்மடங்கு விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சாமையின் பயன்
சாமை அரிசி உணவு குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் சாப்பாடு, உப்புமா மற்றும் மொறு,மொறு பிஸ்கட்டுகள் தயாரிக்க பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. சாமை அரிசிக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாக கூறப்படுகிறது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக சாமை அரிசியில் இருந்து பெறப்படும் தவிட்டில் எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நாசிக்கில் அச்சடிக்கப்படும் இந்திய ரூபாய் நோட்டுகள் பளபளப்பாக இருக்க பயன்படுத்தப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.

< return to the news  

Add comment

(Press Ctrl+g or click this to toggle between English and Tamil)


Security code
Refresh

அரசியல் செய்தி
குழந்தைக்கு மது கொடுப்பதை அதிமுக ஆதரிக்கிறதா?- விஜயகாந்த்
அராஜகமான முறையில் குழந்தைக்கு வலுக்கட்டாயமாக மது கொடுப்பதை அதிமுகவினர் ஆதரிக்கிறார்களா என்று கேள்வி எழுப்பியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், இனியாவது...
MR கிளிக்
தமிழகத்தில் நான்குமுனைப்போட்டி! விஜயகாந்த் வராததால் வைகோ, ராமதாஸ் மகிழ்ச்சி!! விஜயகாந்த் - சோனியாகாந
தமிழகத்தில் நான்குமுனைப்போட்டி! விஜயகாந்த் வராததால் வைகோ, ராமதாஸ் மகிழ்ச்சி!! ‘‘நதியினில் வெள்ளம் கரையினில் நெருப்பு இரண்டுக்கும் நடுவே இறைவனின் சிரிப்பு. ஏனிந்த சிரிப்பு?’’...